செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

ஒரு மாணவர்கூட இல்லாத 45 பள்ளிகள் நூலகம் ஆக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

Published On 2019-07-18 07:48 GMT   |   Update On 2019-07-18 07:48 GMT
ஒரு மாணவர் கூட இல்லாத 45 பள்ளிகளை தற்காலிகமாக நூலகமாக்க திட்டமிட்டுள்ளதாக சட்டசபையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை:

சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. (தி.மு.க.) பேசியதாவது:-

தமிழகத்தில் 1,748 பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதாகவும், அவை நூலகம் ஆக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து இருப்பதாக செய்தி வந்துள்ளது. மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 12 ஆயிரம் நூலகங்கள் தொடங்கப்பட்டன. அவற்றை பராமரிக்க வேண்டும். பள்ளிகளை மூடக்கூடாது.

இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.

இதற்கு பதில் அளித்த  அமைச்சர் செங்கோட்டையன்:-

உறுப்பினர் கூறியபடி 1,748 பள்ளிகளை மூடி நூலகம் ஆக்கும் திட்டம் எதுவும் இல்லை. தற்போது 45 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை. இந்த பள்ளிகளை தற்காலிகமாக நூலகம் ஆக்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்களே இல்லாத பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் அருகில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள்.

இது தற்காலிக நூலகம்தான். மாணவர்கள் வந்து சேர்ந்தால் இந்த பள்ளிகள் மீண்டும் செயல்படும். எந்த ஒரு பள்ளியையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Tags:    

Similar News