செய்திகள்
தமிழக மீனவர்கள்

நெடுந்தீவு அருகே மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது- இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2019-07-12 10:08 GMT   |   Update On 2019-07-12 10:08 GMT
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாழையைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க புறப்பட்டனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ‘நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கிறீர்கள். உடனே இடத்தை காலி செய்யுங்கள்’ என்று எச்சரித்தனர்.

அதைத் தொடர்ந்து நாட்டுப்படகு மீனவர்கள் கரை திரும்ப தயாரானார்கள். அந்த சமயத்தில் இலங்கை கடற்படையினர் திடீரென்று ஒரு நாட்டுப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சங்கர் (வயது 45), நாகூர் (26), கவியரசன் (20), ராஜூ (18), செட்டி (35) உள்பட 6 மீனவர்களை கைது செய்தனர். அந்த படகில் இருந்த மீன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான மீனவர்கள் 6 பேரும் காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
Tags:    

Similar News