செய்திகள்
அமைச்சர் ஆர்பி உதயகுமார்

கட்டிடம் இடிந்து 3 பேர் பலி - பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்

Published On 2019-07-06 14:21 GMT   |   Update On 2019-07-06 14:21 GMT
கட்டிடம் இடிந்து 3 பேர் பலியானார்கள். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
மதுரை:

மதுரை மாவட்டம், செக்கானூரணியில் கட்டிடப்பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியானார்கள். 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பலியானோரின் உடலை அவரது உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவர் களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆர்.பி.உதய குமார் ஆறுதல் கூறினார்.

மேலும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களின் உடல் நலம் குறித்தும் கேட்ட றிந்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதா வது:-

கட்டிட விபத்தில் பலியான வர்கள் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட் டுள்ளது. அவர்களின் குடும் பத்துக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

படுகாயம் அடைந்தவர் களுக்கும், அரசின் நிவா ரண உதவி கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்படும். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறி னார்.

இதைத்தொடர்ந்து செக்கானூரணியில் கட்டிட விபத்து நடந்த பகுதியையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கலெக்டர் ராஜசேகர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
Tags:    

Similar News