செய்திகள்

28, 18 சதவீத ஜி.எஸ்.டி.யை முழுவதும் நீக்க வேண்டும் - விக்கிரமராஜா

Published On 2019-02-06 08:23 GMT   |   Update On 2019-02-06 08:23 GMT
28, 18 சதவீத ஜி.எஸ்.டி.யை முழுவதும் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். #Vikramaraja #GST

சேலம்:

சேலம் லீ பசார் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

36-வது வணிகர் சங்க மாநாடு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மகாலில் விரைவில் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி எங்களது கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற மாநாட்டில் வலியுறுத்தப்படும்.

ஜி.எஸ்.டி. பாதிப்பில் இருந்து மீண்டு வர 28 மற்றும் 18 சதவீத வரிகளை முற்றிலும் நீக்க வேண்டும், ஜி.எஸ்.டி. மூலம் வசூல் செய்து எங்களுக்கு திருப்பி தர வேண்டிய 96 ஆயிரம் கோடியை திருப்பி தர வேண்டும், மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளை புறந்தள்ளி வருகிறது.

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அதில் உள்ள இடர்பாடுகளை களைய வேண்டும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கோரிக்கைகளை உறுதி மொழியாக எழுதி கொடுப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

1 கோடிக்கும் அதிகமானோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். 60 வயதை கடந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பிளாஸ்டிக் தடையில் அத்துமீறும் அதிகாரிகளை எதிர்த்து போராடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.  #Vikramaraja #GST

Tags:    

Similar News