செய்திகள்

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Published On 2018-10-01 08:59 GMT   |   Update On 2018-10-01 08:59 GMT
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். #arrest

குள்ளனம்பட்டி:

ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி டி.எஸ்.பி. ஆனந்த் தலைமையில் இன்ஸ்பெக்டர் தவுடர் நிஷா, சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

ஆத்தூர் பிரிவில் நேற்று இரவு அவர்கள் வாகன தணிக்கையில் இருந்தபோது ஆந்திர பதிவு எண் கொண்ட ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அதனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். காருக்குள் 60 கிலோ எடை கொண்ட 2 மூட்டை கஞ்சா இருந்தது தெரிய வந்தது. காரை ஓட்டியவர் ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த உகம்சந்த் குமாவத் (வயது 33) என தெரிய வந்தது. இவர் ஆந்திராவில் இருந்து கள்ளத்தனமாக கஞ்சாவை கடத்தி விற்பனைக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட உகம்சந்த் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. #arrest

Tags:    

Similar News