செய்திகள்

காங்கயத்தில் ரூ. 2 ஆயிரம் கலர் ஜெராக்ஸ் நோட்டு புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது

Published On 2018-10-01 06:36 GMT   |   Update On 2018-10-01 06:36 GMT
காங்கயத்தில் ரூ. 2 ஆயிரம் கலர் ஜெராக்ஸ் நோட்டை புழக்கத்தில் விட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். #FakeCurrency

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சென்னிமலை ரோட்டில் உள்ள ஒரு கடையில் 3 பேர் ரூ. 2 ஆயிரம் நோட்டை கொடுத்து பொருள் வாங்கி உள்ளனர்.

அப்போது நோட்டு வித்தியாசமாக இருந்ததால் கடைக்காரர் உன்னிப்பாக கவனித்து உள்ளார். அப்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து வந்து அவர்கள் மாற்ற முயன்றது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கலர் ஜெராக்ஸ் நோட்டை மாற்ற முயன்றது வெள்ள கோவில் வெங்கமேட்டை சேர்ந்த குமார் (27), காங்கயம் வீரணாம் பாளையம் சதிஷ் (22), படியூர் சாமிநாதன் (43) என்பது தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கலர் ஜெராக்ஸ் நோட்டுகள், 2 ஸ்கேனர், ஒரு லேப் டாப், பிரிண்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைதான 3 பேருக்கும் சர்வதேச கள்ள நோட்டு அச்சடிக்கும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? தமிழகத்தில் வேறு எங்கும் இவர்கள் கலர் ஜெராக்ஸ் நோட்டை புழக்கத்தில் விட்டார்களா? கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை வேறு எங்கும் பதுக்கி வைத்து உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள கிராமங்களில் வியாபாரிகள் என்ற பெயரில் ரூ. 2 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டு கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றதாக சிலர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது காங்கயத்தில்ஜெராக்ஸ் நோட்டு புழக்கத்தில் விடப்பட்டதால் வியாபாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.  #FakeCurrency

Tags:    

Similar News