செய்திகள்
கோப்புப்படம்

வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2018-09-27 04:22 GMT   |   Update On 2018-09-27 04:22 GMT
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. #VaigaiDam
கூடலூர்:

இந்த ஆண்டு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது தேனி மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்வதால் குறைந்த அளவே நீர் வரத்து உள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2,170 கன அடியில் இருந்து 1,660 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 56.50 அடியாக உள்ளது. அணைக்கு 1,014 கன அடி நீர் வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம் 125.35 அடியாக உள்ளது. அணைக்கு 1,062 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1,200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 41.75 அடியாக உள்ளது. 16 கன அடி நீர் வருகின்ற நிலையில் தண்ணீர் திறப்பு இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 118.73 அடியாக உள்ளது. 33 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள போடி, உத்தமபாளையம், கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

பெரியாறு 7.6, தேக்கடி 52.6, கூடலூர் 1.2, சண்முகாநதி அணை 7, உத்தமபாளையம் 25.6, வீரபாண்டி 25, வைகை அணை 14.2, மஞ்சளாறு அணை 25, சோத்துப்பாறை 36. #VaigaiDam
Tags:    

Similar News