செய்திகள்
திருத்தங்கல் நகராட்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பொதுமக்களை சந்தித்து மனுக்கள் வாங்கினார்.

கண் தெரியாத மூதாட்டியின் மருத்துவ செலவை ஏற்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Published On 2018-07-30 11:01 GMT   |   Update On 2018-07-30 11:01 GMT
சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் பொதுமக்களை சந்தித்து மனுக்கள் பெற்ற அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மூதாட்டியின் ஒருவரின் கண் அறுவை சிகிச்சை செலவு தொகையை ஏற்றுக் கொண்டார்.
சிவகாசி:

சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சியில் விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். ஏராளமான பொதுமக்கள் அமைச்சரிடம் நேரில் மனுக்கொடுத்து குறைகளை தெரிவித்தனர்.

பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் குறைகளையும் கேட்டறிந்தார். பட்டாசு பெண் தொழிலாளி ஒருவருக்கு மருத்துவ செலவிற்கு உதவித் தொகை வழங்கினார். கண்கள் தெரியாத மூதாட்டி ஒருவர் மனு கொடுத்தார். மூதாட்டியிடம் அமைச்சர் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர், தான் சிவகாசி அருகே முனீஸ்வரன் காலனியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்றும் தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய உதவ வேண்டும் என்றும் அமைச்சரிடம் தெரிவித்தார்.

உடனடியாக சிவகாசியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையை தொடர்பு கொண்ட அமைச்சர் மூதாட்டிக்கு வேண்டிய அறுவை சிகிக்சையை மேற்கொள்ளுமாறும் அதற்கான செலவு தொகையை தானே ஏற்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அந்த மூதாட்டிக்கு மருத்துவ உதவித் தொகையும் வழங்கினார். மூதாட்டி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News