செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்ட வாலிபரை போலீஸ் கமி‌ஷனர் நேரில் சந்தித்து ஆறுதல்

Published On 2018-07-24 05:10 GMT   |   Update On 2018-07-24 05:10 GMT
சென்னை சேத்துப்பட்டில் சப்-இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்ட வாலிபர் முகமது ஆரூனின் வீட்டுக்கு நேரில் சென்ற போலீஸ் கமி‌ஷனர் நடந்த சம்பவம் குறித்து ஆறுதல் கூறினார். #Chennai #policecommissioner
சென்னை:

சென்னை சேத்துப்பட்டு ஸ்பெர்டாங் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த முகமது ஆரூன் என்ற வாலிபரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, முகமது ஆரூனிடம் வாகனத்துக்கான ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் முகமது ஆரூன் தாக்கப்பட்டார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா மீது குற்றம் சாட்டப்பட்டது. தாக்குதலில் காயம் அடைந்த வாலிபர் முகமது ஆரூன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், காயம் அடைந்த வாலிபர் முகமது ஆரூனின் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்த அவர் ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே பத்திரிகை செய்திகளை அடிப்படையாக வைத்து மாநில மனித உரிமை ஆணையம், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. #Chennai #policecommissioner
Tags:    

Similar News