செய்திகள்

ராமேசுவரத்தில் சிக்கிய ஆயுத குவியலை ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு வருகை

Published On 2018-07-03 10:24 GMT   |   Update On 2018-07-03 10:24 GMT
ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் சிக்கிய ஆயுத குவியலை ஆய்வு செய்ய சென்னையில் இருந்து நிபுணர்கள் குழு வந்துள்ளது.
ராமேசுவரம்:

ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்க குழி வெட்டியபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த பயங்கர வெடி குண்டுகள், தோட்டாக்கள், கண்ணி வெடிகள் சிக்கின.

அந்த பகுதியிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிபொருட்களை நீதிபதி பாலமுருகன் நேரில் ஆய்வு செய்தார். வெடிபொருட்களை செயலிழக்கவும், அழிக்கவும் சென்னையில் உள்ள வெடி பொருட்கள் தலைமை கட்டுப்பாட்டு இணை அலுவலக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஒப்புதல் சான்றிதழ் வழங்க கோரி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து நீதிபதியின் உத்தரவு கடிதம் சென்னையில் உள்ள வெடிபொருட்கள் தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வழங்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் வெடி பொருட்களை ஆய்வு செய்வதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தனர்.

இங்கிருந்து கார் மூலம் தங்கச்சிமடத்துக்கு சென்றனர். இன்று பிற்பகலில் வெடி பொருட்களை ஆய்வு செய்தார்கள்.

அவர்கள் ஒப்புதல் கடிதம் கொடுத்தவுடன் வெடி பொருட்களை செயழிலக்கவும், அழிக்கவும் நீதிபதி ஒப்புதல் வழங்குவார் என தெரிகிறது. #Tamilnews
Tags:    

Similar News