செய்திகள்

திருக்கோவிலூர் சம்பவம்: தில்லைநாதன் மீது மேலும் 2 பெண்கள் புகார்

Published On 2018-04-07 14:50 GMT   |   Update On 2018-04-07 14:50 GMT
திருக்கோவிலூர் அருகே மாணவனை அடித்து கொன்ற வழக்கில் தில்லைநாதன் மீது மேலும் 2 பெண்கள் புகார் கூறியுள்ளதால் வெள்ளாம்புத்தூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் வெள்ளாம்புத்தூர் கிராமத்தில் ஆராயி வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த தில்லைநாதனை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் இவர் வெள்ளாம்புத்தூர் கிராமத்தில் பல பெண்களை தாக்கி நகை பறித்து சென்றது தெரியவந்து. ஆனால் பெண்கள் யாரும் இதுகுறித்து புகார் செய்யாமல் இருந்தனர். தில்லைநாதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளாம்புத்தூரை சேர்ந்த 4 பெண்கள் அரகண்டநல்லூர் போலீஸ்நிலையத்தில் புகார் ெச்யதனர். அதில் தில்லைநாதன் வீடு புகுந்து தாக்கிவிட்டு நகையை பறித்து சென்றுவிட்டதாக புகார் கூறியிருந்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில் வெள்ளாம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மனைவி மணிமேகலை (32) என்பவர் அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

அதில் கடந்த 12.9.2017 அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தில்லைநாதன் வீடு புகுந்து கழுத்தில் கிடந்த 5½ கிராம் நகையை திருடிசென்று விட்டார். அதுபோல் வெள்ளாம்புத்தூர் அருகே உள்ள டி.தேவனூர் கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்ற பெண்ணும் புகார் செய்துள்ளார். அதில் 20.9.2017 அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது தில்லைநாதன் வீடு புகுந்து என்னை தாக்கிவிட்டு 6½ கிராம் நகையை திருடிச் சென்றுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தில்லைநாதன் மீது மேலும் 2 பெண்கள் புகார் கூறியுள்ளதால் வெள்ளாம்புத்தூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News