search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman complaint"

    • திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார்.
    • சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது சம்பந்தப்பட்ட சலீமுடன் அந்த பெண் சென்றது தெரியவந்தது

    செங்கல்பட்டு அருகே உள்ள சாலவாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் கிருஷ்ணவேணி என்பவரது வீட்டின் கதவை இளம்பெண் ஒருவர் தட்டியுள்ளார். தொடர்ந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருந்த தன்னை நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அவர்களிடமிருந்து போராடி தப்பி வந்ததாகவும் காவல் நிலையத்தில் தன்னை ஒப்படைக்கும் படி கூறி உள்ளார்.

    இதனைஅடுத்து சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அடுத்த கை களத்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் என்பதும், சென்னை சைதாப்பேட்டையில் தங்கி டெலிகாலராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    இவருக்கும் உத்திரமேரூர் அடுத்த மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்ய பலமுறை வற்புறுத்தியும் திருமணம் செய்ய முடியாது என சலீம் கூறி உள்ளார். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். அதேபோல நேற்று இரவும், செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்த பெண்ணை சலீம் சாலவாக்கம் அருகே மாம்பாக்கம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் இடையே திருமணம் செய்து கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அப்பெண்ணை தாக்கிய சலீம் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இதைத்தொடர்ந்து அப்பெண் அருகே இருந்த வீட்டிற்கு சென்று சலீமை காவல்துறையிடம் சிக்க வைக்க கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக நாடகமாடியிருக்கிறார்.

    முன்னதாக காவல்துறையினரிடம் தன்னை காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக பெண் கூறியதால் செங்கல்பட்டு நகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பந்தப்பட்ட சலீமுடன் இரு சக்கர வாகனத்தில் அந்த இளம்பெண் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் திவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

    தருமபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சோமன அள்ளியை அடுத்துள்ள சோம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஜெயமதி (வயது46). இவர்களுக்கு வெண்ணிலா (27) என்ற மகள் உள்ளார்.

    இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு தாய்-மகள் 2 பேரும் மனு கொடுக்க வந்தனர். அப்போது திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணையை ஊற்றி ஜெயமதி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் சுதாரித்து கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயமதி கூறியதாவது:-

    சோமனஅள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு வெண்ணிலா என்ற மகள் உள்ளார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த தென்னரசு என்பவருடன் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளோம். அவர்கள் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

    தென்னரசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்தது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை நான் பல முறை சென்று சமாதானம் செய்து வைத்தேன். தென்னரசு விடம் கள்ள தொடர்பை கைவிட வேண்டும் என்று கண்டித்துள்ளேன்.

    ஆனால் அவர் கள்ள தொடர்பு வைத்திருந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். ஆனால் அவர் இனிமேல் அந்த பெண் இங்கே தான் இருப்பார் என்று கூறினார். இதனால் நாங்கள் இண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நான் எனது மகளுடன் மனு கொடுக்க வந்தேன். அப்போது நான் நடவடிக்கை எடுக்காத இண்டூர் போலீசாரை கண்டித்தும், எனது மகளின் கணவரை மீட்டுத்தர கோரியும் தீக்குளிக்க முயற்சி செய்தேன். அதற்கு முன்பே போலீசார் என்னை தடுத்து நிறுத்தினர்.

    இந்தநிலையில் எங்களை தருமபுரி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் போலீசார் எங்களிடம், விருப்பம் உள்ளவர்கள் யாருடனும் சேர்ந்து வாழலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. கோர்ட்டு உத்தரவுபடி எங்களால் இந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், இருப்பினும் இது குறித்து நாங்கள் விசாரிக்கிறோம் என்றும் கூறினர். பின்னர் எங்களை மாலை வரை காவலில் வைத்து விட்டு, வீட்டிற்கு போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போன்று பெரியாம்பட்டி அடுத்துள்ள பூனத்த அள்ளி கிராமத்தை சேர்ந்த காளியம்மாள் (வயது45). இவரது மகள் ராசாத்தி (21).

    இவர்கள் இருவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணவரை வேறு பெண்ணுடன் உள்ள தொடர்பில் இருந்து மீட்டு தரக்கோரியும், காரிமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தீக்குளிக்க முயன்றனர்.

    இவர்களையும் தருமபுரி டவுன் போலீசார் தடுத்து நிறுத்தி. காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையொட்டி இது போன்று பெண்கள் தங்கள் கணவரின் மீது கொடுக்கும் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். #tamilnews
    வேதாரண்யம் அருகே முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்ததாக கணவர் மீது பெண் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவரது மகள் குணவதி (38). இவருக்கும் தென்னம்புலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ரவிச்சந்திரன் என்பவருக்கும் 3.3.14 அன்று திருமணம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் ஊரில் தங்கி விட்டு ரவிச்சந்திரன் மலேசியா சென்று விட்டார். இந்த நிலையில் குணவதி தன் கணவர் ரவிச்சந்திரன் முதல் திருமணம் செய்து கொண்டதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆகவே அவர் மீதும், அவரை சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வேதாரண்யம் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

    புகாரின் பேரில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வர்ஜினியா வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரன், சுப்பிரமணியன், செல்வராஜ், காமேஸ்வரத்தைச் சேர்ந்த அமுதா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

    2-வது கணவர் சித்ரவதை செய்வதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் சீயோன் நகரில் வசிப்பவர் சைபுன்னிஷா (வயது38). தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இவர் கணவரை பிரிந்து 4 பெண் குழந்தைகள் மற்றும் மகனுடன் கடந்த சில ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தார்.

    இந்த நிலையில் திருமங்கலம் நகர் போலீசில் சைபுன்னிஷா புகார் மனு அளித்துள்ளார். அதில், சீயோன் நகரைச் சேர்ந்த முகமதுஇப்ராகிம் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன்.

    தற்போது அவர் தினமும் மது அருந்தி வந்து அடித்து உதைத்து சித்ரவதை செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி முகமதுஇபுராகிமை கைது செய்தனர்.

    சென்னை மயிலாப்பூரில் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது வாலிபர் 2-வது திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விஜய் (32). இவருக்கும் மயிலாப்பூர் குயில் தோட்டம் பகுதியை சேர்ந்த பவானி (24)-க்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சஞ்சய் (5), விக்னேஷ் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விஜய் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் முதல் மனைவி பவானிக்கு தெரியாமல் மற்றொரு பெண்ணை விஜய் 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடந்துள்ளது.

    கணவர் 2-வது திருமணம் செய்து கொண்ட தகவல் பவானிக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவரது உறவினர்களும் ஆவேசம் அடைந்தனர். பவானி மயிலாப்பூர் மற்றும் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கடலூர், போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடமும் நேரில் முறையிட்டார். கடலூர் போலீசார் திருமணம் நடந்த கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். பொய்யான சான்றிதழ் கொடுத்து விஜய் 2-வது திருமணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து விஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். மயிலாப்பூர் போலீசார் உதவியுடன் சென்னையில் முகாமிட்டு கடலூர் போலீசார் விஜயை தேடி வருகின்றனர்.

    முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது 2-வது திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×