என் மலர்
செய்திகள்

திருமங்கலத்தில் 2-வது கணவர் சித்ரவதை செய்வதாக பெண் புகார்- வாலிபர் கைது
2-வது கணவர் சித்ரவதை செய்வதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பேரையூர்:
திருமங்கலம் சீயோன் நகரில் வசிப்பவர் சைபுன்னிஷா (வயது38). தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இவர் கணவரை பிரிந்து 4 பெண் குழந்தைகள் மற்றும் மகனுடன் கடந்த சில ஆண்டுகளாக இங்கு வசித்து வந்தார்.
இந்த நிலையில் திருமங்கலம் நகர் போலீசில் சைபுன்னிஷா புகார் மனு அளித்துள்ளார். அதில், சீயோன் நகரைச் சேர்ந்த முகமதுஇப்ராகிம் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன்.
தற்போது அவர் தினமும் மது அருந்தி வந்து அடித்து உதைத்து சித்ரவதை செய்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி முகமதுஇபுராகிமை கைது செய்தனர்.
Next Story






