செய்திகள்
திருப்பத்தூரில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு நல்லதம்பி எம்.எல்.ஏ. மாலை அணிவித்தபோது எடுத்த படம்.

திருப்பத்தூரில் உடைக்கப்பட்ட பெரியார் சிலை புதுப்பிப்பு

Published On 2018-03-12 10:00 GMT   |   Update On 2018-03-12 10:05 GMT
திருப்பத்தூரில் உடைக்கப்பட்ட பெரியார் சிலை புதுப்பிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்சியினர் ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திருப்பத்தூர்:

திரிபுராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அங்கிருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது. இதே போல் தமிழ்நாட்டில் பெரியார் சிலைகள் அப்புறப்படுத்தப்படும் என்று எச்.ராஜா பேஸ் புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூரில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகில் இருந்த 3 அடி மார்பளவு பெரியார் சிலையை பா.ஜனதா பிரமுகர் முத்துராமன், பிரான்சிஸ் ஆகிய 2 பேரும் உடைத்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் பெரியார் சிலையை ‘பிளாஸ்டிக் கவர்’ கொண்டு மூடி வைத்தனர். இந்த நிலையில் பெரியார் சிலையை புதுப்பிக்கும் பணி நடந்தது. சிலையில் சேதம் ஏற்பட்டிருந்த முகம் பகுதி, மற்றும் கண்ணாடி சீரமைக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலை திறக்கப்பட்டது.

இதையடுத்து சிலைக்கு ஊர்வலமாக சென்று பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்தனர். திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.நல்லதம்பி, தி.மு.க. நகர செயலாளர் எஸ்.ராஜேந்திரன் மாலை அணிவித்தனர்.

ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  #tamilnews


Tags:    

Similar News