செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்

Published On 2018-02-15 06:51 GMT   |   Update On 2018-02-15 06:51 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். #Rajinikanthpoliticalentry #Rajinikanth #RajiniMakkalMandram
அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,  தூத்துக்குடி, திருச்செந்தூர், கருங்குளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, புதூர், ஸ்ரீவைகுண்டம், உடன்குடி ஒன்றியங்கள், கோவில்பட்டி, காயல்பட்டினம் நகரங்கள், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் மண்டலங்களுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் செயலாளர்கள், இணை செயலாளர்கள், துணை செயலாளர்கள் மறறும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கயத்தாறு, ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம், விளாத்திகுளம் ஒன்றியங்களுக்கான பொறுப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



இதற்கிடையே ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் பணியில் முக்கிய பங்கு வகித்து வந்த  ராஜு மகாலிங்கம் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், ரஜினிகாந்த் நடிக்கும் 2.ஓ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanthpoliticalentry #Rajinikanth #RajiniMakkalMandram  #tamilnews
Tags:    

Similar News