செய்திகள்

ஓட்டேரியில் மகன் தாக்கியதால் வியாபாரி மரணம்

Published On 2018-02-07 09:11 GMT   |   Update On 2018-02-07 09:11 GMT
ஓட்டேரியில் மகன் தாக்கியதால் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

ஓட்டேரியை அடுத்த கொசப்பேட்டை மார்க்கெட் அருகே உள்ள புதுத்தெருவைச் சேர்ந்தவர் அரிகரன் (60). காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மகன் நரேந்திரன்.

மது பழக்கம் உள்ள நரேந்திரன் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். மாடிக்கு சென்றபோது தந்தை அரிகரனுடன் தகராறு செய்தார். இருவருக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த நரேந்திரன் தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் அரிகரன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அதன்பின் போதையில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த நரேந்திரன் வீட்டுக்குள் சென்று படுத்து தூங்கி விட்டார்.

காலையில் பார்த்தபோது அரிகரன் இறந்து கிடந்தார். ஆனால் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் அரிகரன் உடலை தகனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் முகமதுநாசர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அரிகரன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிககு அனுப்பி வைத்தனர். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து நரேந்திரனை கைது செய்து விசாரித்தனர். அவர் போலீசிடம் கூறுகையில், “குடிபோதையில் தந்தையிடம் தகராறு செய்தபோது ஆத்திரத்தில் அவரை தாக்கினேன். இதில் அவர் கீழே விழுந்தார். அதன்பின் நான் வீட்டுக்கு சென்று படுத்து தூங்கி விட்டேன். காலையில்தான் அவர் இறந்தது தெரிந்தது” என்றார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News