செய்திகள்

மாதாந்திர பஸ் பாஸ் வைத்திருப்போருக்கு கூடுதல் கட்டணம் கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்

Published On 2018-01-21 04:16 GMT   |   Update On 2018-01-21 04:16 GMT
மாதாந்திர பஸ் பாஸ் மற்றும் ரூ.1,000-க்குரிய பயண அட்டை வைத்திருப்பவர்கள், பஸ் பாஸில் குறிப்பிட்டுள்ள முடிவுறும் தேதி வரை கூடுதல் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் ஒரு நாள் விருப்பம் போல் பயணம் செய்யும் 50 ரூபாய் கட்டண தினசரி பாஸ் தற்போது வழங்கப்படுவதில்லை. புதிய கட்டணம் நிர்ணயம் செய்த பின்னர் தினசரி பாஸ் வழங்கப்படும்.

மாநகர போக்குவரத்து கழக கவுண்ட்டர்களில் ஏற்கனவே வழங்கப்பட்ட மாதாந்திர பஸ் பாஸ் மற்றும் ரூ.1,000-க்குரிய பயண அட்டை வைத்திருப்பவர்கள், பஸ் பாஸில் குறிப்பிட்டுள்ள முடிவுறும் தேதி வரை கூடுதல் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய பஸ் கட்டணத்தில் சாதாரண பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.5-ம், அதிகபட்சம் ரூ.23-ம், விரைவு பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.8-ம், அதிகபட்சம் ரூ.35-ம், சொகுசு பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.12-ம், அதிகபட்சம் ரூ.48-ம், குளிர்சாதன பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.25-ம், அதிகபட்சம் ரூ.125-ம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடம் இருந்து பயண கட்டணத்துடன் ரூ.1 மற்றும் குளிர்சாதன பஸ்சில் ரூ.2 சேர்த்து விபத்து, சுங்க வரியாக வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News