செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல தடை

Published On 2017-12-21 09:45 GMT   |   Update On 2017-12-21 09:45 GMT
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக நாளையும் (21-ந்தேதி) நாளை மறுநாளும் (22-ந்தேதி) ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்:

வருகிற 23-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வருகிறார். தரிசனம் முடிந்ததும் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கலெக்டர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக நாளையும் (21-ந்தேதி) நாளை மறுநாளும் (22-ந்தேதி) ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News