செய்திகள்

இந்தியன் வங்கி சார்பில் கல்வி, வாகன கடன் வழங்கும் முகாம்

Published On 2017-12-13 03:03 GMT   |   Update On 2017-12-13 03:03 GMT
வாகனம் மற்றும் கல்வி கடன் வழங்கும் முகாம், சேத்துப்பட்டில் இந்தியன் வங்கியின் வடக்கு மண்டலம் சார்பில் நடத்தப்பட்டது.
சென்னை:

வாகனம் மற்றும் கல்வி கடன் வழங்கும் முகாம், சேத்துப்பட்டில் இந்தியன் வங்கியின் வடக்கு மண்டலம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொது மேலாளர் மற்றும் மண்டல மேலாளர் எம்.கார்த்திகேயன், ஊரக வங்கி பிரிவு துணை பொது மேலாளர் என்.செல்வம், துணை பொது மேலாளர் ஜி.சுகுமார் மற்றும் இந்தியன் வங்கி வடக்கு மண்டல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் ரூ.13.59 கோடி அளவில் 162 பேருக்கு கல்வி கடனுக்கான அனுமதி மற்றும் ரூ.2.77 கோடி அளவில் 27 வாகன கடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி உத்தரவுகளை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் பெற்றுக்கொண்டனர். கல்வி கடனுக்காக விண்ணப்பித்திருந்த பலருக்கும் வங்கி உயர் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு இந்த முகாமில் கிடைத்தது.

கல்வி கடன் மற்றும் வாகன கடன் வழங்குவதில் இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வரும் வசதிகளை கார்த்திகேயன் எடுத்துரைத்தார். சமீபத்தில் வங்கி வாரியம் அளித்துள்ள நிபந்தனை தளர்வுகள் பற்றி என்.செல்வம் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஜி.சுகுமார் வரவேற்றார்.
Tags:    

Similar News