செய்திகள்

எண்ணூர் துறைமுகத்தில் ஆக்கிரமிப்பு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2017-11-02 08:09 GMT   |   Update On 2017-11-02 08:09 GMT
எண்ணூர் துறைமுகத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொய்யான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த அத்திபட்டு புதுநகர் பகுதியில் செல்லும் பக்கிங்காம் கால்வாய் காமராஜர் துறைமுகம் ஆகியவற்றை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் கூறியதாவது:-

கொசஸ்தலை ஆற்றில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் இருந்து வரும் சாம்பல் கழிவு தான் கலக்கிறது. காமராஜர் துறைமுகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஏதும் கலக்கவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சாம்பல் பைப் உடைந்து சாம்பல் கொட்டுகிறது. இதனால் துறைமுகத்தின் நிலத்திற்கே பாதிப்பு. எண்ணூர் துறைமுகத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொய்யான தகவலை யாரும் பரப்ப வேண்டாம்.

ஆற்றை ஆழப்படுத்தி மீனவர்களுக்கு பயன்படும் வகையில் எண்ணூர் துறைமுகத்தில் 20 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2015 ஏற்பட்ட துயரங்களை ஒரு படிப்பினைகளாக எடுத்துக் கொண்டு செயல்படவில்லையென்றால் மீண்டும் மீண்டும் அதே துயரம் ஏற்படும். தமிழகத்தில் 50 வருடங்களாக மாநில அரசு எத்தனை தடுப்பணைகள் கட்டியிருக்கிறது. நீர் பிடிப்பு பகுதிகளில் குடியிருப்புகளை கட்டி நீர்பிடிப்பு பகுதிகளே இல்லாமல் செய்தது தமிழக மக்களுக்கும் சென்னை மக்களுக்கும் செய்த துரோகம். மாநில அரசில் மத்திய அரசு தலையிடாது எனவும் மாநில அரசு கேட்டுக்கொண்டால் எது தேவையோ மத்திய அரசு உதவிசெய்ய தயாராக உள்ளது.

Tags:    

Similar News