செய்திகள்

திருத்தணி அருகே காரில் கடத்திய ரூ.20 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்

Published On 2017-09-23 09:18 GMT   |   Update On 2017-09-23 09:18 GMT
திருத்தணி அருகே காரில் கடத்திய ரூ.20 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

ஆந்திராவிலிருந்து தமிழக எல்லையான திருத்தணி வழியாக செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது, தொடர் கதையாக உள்ளது.

இந்த நிலையில் திருத்தணி அருகே நெமிலி பகுதியில் கனகம்மாசத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஆந்திரா பதிவு எண் கொண்ட காரும், தமிழக பதிவு எண் கொண்ட காரும் வேகமாக வருவதைக் பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் கார்கள் நிற்காமல் வேகமாக சென்றதால் போலீசார் விரட்டிச் சென்றனர். கார்களை அருங்குளம் ஏரிக்கரை பகுதியில் நிறுத்திவிட்டு 2 டிரைவர்களும் தப்பி ஓடினர்.

போலீசார் காரை சோதனை செய்ததில் ஆந்திர பதிவு எண் கொண்ட காரில் ரூ.20 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி ஆந்திர பதிவு எண் கொண்ட வாகனத்தில் கொண்டு வந்து அதனை தமிழக எல்லைப் பகுதிக்கு வந்ததும் தமிழக பதிவு எண் கொண்ட வாகனத்தில் ஏற்றி அதனை சென்னைக்கு அனுப்பி வைக்க உள்ளது விசாரணையில் தெரியவந்தது.
Tags:    

Similar News