செய்திகள்

புதுவை நடுக்கடலில் தத்தளித்த பறவை ஆராய்ச்சியாளர்கள்

Published On 2017-09-18 06:19 GMT   |   Update On 2017-09-18 06:19 GMT
புதுவை நடுக்கடலில் தத்தளித்த பறவை ஆராய்ச்சியாளர்கள் 14 பேரை கடலோர காவல்படை போலீசார் மீட்டனர்.

புதுச்சேரி:

புதுவை தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து தனியார் படகு கிளப் நிறுவனத்தின் உதவியுடன் பறவை ஆராய்ச்சியாளர்கள் நடுகடலுக்கு சென்று பறவைகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

சென்னை, மும்பை, கர்நாடகா பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆராய்ச்சியாளர் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் படகு மூலம் நடுகடலுக்கு சென்றனர்.

அங்கு வெளிநாட்டு பறவைகளை ஆராய்ச்சி செய்து விட்டு மீண்டும் படகில் கரைக்கு திரும்ப முயன்றனர். அப்போது படகு பாதி வழியில் பழுதடைந்தது.

இதனால் பறவை ஆராய்ச்சியாளர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். இதனையடுத்து படகை ஓட்டி சென்ற மீனவர் புதுவை கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தார்.

கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் பாலசந்தர் தலைமையில் போலீசார் படகில் சென்று கடலில் தத்தளித்த ஆராய்ச்சியாளர்கள் 6 பேரை முதலில் மீட்டனர். பின்னர், 8 பேரை மற்றொரு படகு மூலம் மீட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் தேங்காய் திட்டு துறைமுகத்திற்கு சென்று ஆராய்ச்சியாளர்களிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News