செய்திகள்

தனுஷ்கோடியில் 4-வது நாளாக பலத்த சூறாவளியால் சாலையை மூடிய மணல் புயல்

Published On 2017-09-18 05:39 GMT   |   Update On 2017-09-18 05:39 GMT
தனுஷ்கோடியில் 4-வது நாளாக வீசும் பலத்த சூறாவளியால் சாலைகளை மணல் புயல் மூடியது.

ராமேசுவரம்:

ராமேசுவரம், தனுஷ் கோடி பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இதனால் கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. 60 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக் காற்று காரணமாக ராமே சுவரம் புது ரோட்டில் இருந்து எம்.ஆர். சத்திரம் மற்றும் அரிச்சல்முனை வரை தார் சாலையை மணல் மூடியது. தொடர்ந்து மணல் புயல் வீசுவதால் சாலைகளில் மணல் குவிந்து வருகிறது.

இதனால் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கு இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மட்டுமே சென்று வருகின்றன.

பஸ்களை ஓட்டும் டிரை வர்களும் காதுகளை துணியால் மறைத்தபடியே ஓட்டிச் செல்கின்றனர்.

முகுந்தராயர் சத்திரம் பகுதியில் உள்ள மீன்பிடி இறங்குதளத்திலும் சாலையை மணல் மூடி யுள்ளது. சூறாவளி காற்றின் வேகத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தனுஷ்கோடியில் உள்ள தபால் அலுவலகம் மற்றும் மீனவர்களின் குடிசைகள் சேதம் அடைந்தன.

தொடர்ந்து சூறாவளி காற்று வீசுவதால் இன்று பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Tags:    

Similar News