செய்திகள்
பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை படத்தில் காணலாம்.

10 ஆண்டுகளுக்கு பின்னர் பாலாற்றில் வெள்ளம்

Published On 2017-09-07 03:05 GMT   |   Update On 2017-09-07 03:05 GMT
10 ஆண்டுகளுக்கு பின்னர் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாணியம்பாடி:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ஆந்திர மாநில வனப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் புல்லூர் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது.

இதனால் புல்லூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம், அம்பலூர் பகுதியில் உள்ள பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. வாணியம்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக வாணியம்பாடி பாலாற்றில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையடுத்து அம்பலூர், வாணியம்பாடி பாலாற்றில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி, மலர்களை தூவி வரவேற்றனர். பாலாற்றில் தண்ணீர் வந்ததை தொடர்ந்து விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றி விவசாயத்தை நம்பி பல கிராமங்கள் உள்ளன. கிராமங்களில் உள்ள விவசாய பாசனத்திற்காக பாலாற்றில் இருந்து கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கால்வாய்கள் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாராததால் பாலாற்றில் வெள்ளம் வந்தும் கால்வாய்கள் வழியாக விவசாய நிலங்களுக்கு நீர் வராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்பு பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News