செய்திகள்
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி அணிக்கு தாவல்

Published On 2017-08-16 10:08 GMT   |   Update On 2017-08-16 10:09 GMT
புதுவை வழியாக கடலூர் சென்ற முதல்-அமைச்சர் பழனிச்சாமியை அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், மாநில செயலாளர் புருஷோத்தமனும் வரவேற்றனர். இதன் மூலம் அவர்கள் எடப்பாடி அணிக்கு தாவி உள்ளனர்.
புதுச்சேரி:

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட போது, மாநில செயலாளர் புருஷோத்தமன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா ஆகியோர் சசிகலா பக்கம் இருந்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தார்.

பின்னர் எடப்பாடி அணி, தினகரன் அணி என பிரிந்த போது புதுவை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் தினகரனுக்கு ஆதரவாக இருந்து வந்தனர்.

தினகரன் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் மேலூரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடத்தினார். இதில் 4 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இந்த நிலையில் கடலூர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி புதுவை வழியாக கடலூர் சென்றார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமியை அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் வரவேற்றனர். மேலும் மாநில செயலாளர் புருஷோத்தமனும் வரவேற்றனர். இதன் மூலம் அவர்கள் எடப்பாடி அணிக்கு தாவி உள்ளனர்.

புதுவையில் ஒரே எம்.பி.யான கோகுல கிருஷ்ணன் மேலூர் தினகரன் கூட்டத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.




Tags:    

Similar News