செய்திகள்

காவிரி புஷ்கர கும்பமேளா: திருச்சி கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2017-08-16 09:47 GMT   |   Update On 2017-08-16 09:47 GMT
காவிரி புஷ்கர கும்பமேளா விழாவை யார் நடத்துகிறார்கள்? என்ன என்ன முன்னேற்பாடு நடவடிக்கை செய்துள்ளீர்கள் என்பது தொடர்பாக திருச்சி கலெக்டர் பதிலளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

திருச்சி காவிரி ஆற்றங்கரையில் "காவிரி புஷ்கர கும்பமேளா" எனும் விழா செப்டம்பர் மாதம் 12-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து 30 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். எனவே விழாவில் கலந்து கொள்பவர்களுக்கான வழிகாட்டுதல் மையம், அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என காஞ்சிபுரத்தை சேர்ந்த சுவாமி கோவிந்தரா மானுஜதாசா என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது காவிரி புஷ்கர கும்பமேளா விழாவை யார் நடத்துகிறார்கள்? என்ன என்ன முன்னேற்பாடு நடவடிக்கை செய்துள்ளீர்கள் என்பது தொடர்பாக திருச்சி கலெக்டர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரனையை ஆகஸ்ட் 21-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

Similar News