search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி கலெக்டர்"

    • சம்பா சாகுபடி போதிய தண்ணீர் இல்லாமல் முற்றிலும் கருகி நாசமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
    • பெருவளை வாய்க்கால், உய்ய கொண்ட வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கூட்டுறவு துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், பாரதிய கிசான் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள குளம் மற்றும் ஏரிகளை தண்ணீர் நிரப்புவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதேபோல் சம்பா சாகுபடி போதிய தண்ணீர் இல்லாமல் முற்றிலும் கருகி நாசமானதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தனர்.

    மேலும் பெருவளை வாய்க்கால், உய்ய கொண்ட வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையாக புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர்.

    இந்த கூட்டத்தின்போது கலெக்டர் பிரதீப்குமார் விவசாயத்தை போற்றும் விதமான பச்சை துண்டு அணிந்தபடி குறைகள் கேட்டார். இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    ×