செய்திகள்

வடபழனியில் துணிகரம்: மின்வாரிய அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Published On 2017-07-27 03:19 GMT   |   Update On 2017-07-27 03:19 GMT
வடபழனியில் மின்வாரிய அதிகாரியின் வீட்டில் பூட்டை உடைத்து 100 பவுன் நகை கொள்ளை போனது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு:

சென்னை வடபழனி, ராகவன் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50). மின்வாரிய உதவி பொறியாளராக இருக்கிறார். அவரது மனைவி ரேணுகா (43).

நேற்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு, அருகில் உள்ள கோவிலுக்கு சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ததும் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து, வட பழனி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். காலை நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 100 பவுன் தங்கநகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News