செய்திகள்

ஜனவரி மாதத்துக்குள் புதிய பாடத்திட்டம் தயார்: அதிகாரி தகவல்

Published On 2017-06-29 03:35 GMT   |   Update On 2017-06-29 03:35 GMT
1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற ஜனவரி மாதத்துக்குள் தயாராகி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களும் மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இதையொட்டி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பாடத்திட்டங்களை மாற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

www.tnsc-ert.org என்ற இணையதளத்தில் பாடவாரியாக புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க நிபுணர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. 30-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை 821 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் க.அறிவொளி கூறுகையில், “1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற ஜனவரி மாதத்துக்குள் தயாராகி விடும். அதன் பின்னர் 2018-19-ம் கல்வி ஆண்டில் இந்த வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். அதற்காக ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பல்கலைக்கழக நிபுணர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளோம்” என்றார்.
Tags:    

Similar News