செய்திகள்

காஷ்மீரில் வீர மரணமடைந்த ஊட்டி ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது

Published On 2017-05-17 06:20 GMT   |   Update On 2017-05-17 06:20 GMT
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் வீர மரணமடைந்த ஊட்டி ராணுவ வீரரின் உடல் இன்று அதிகலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே துளித்தலை கிராமத்தை சேர்ந்தவர் நாயக் அசோக் (வயது 26). ராணுவ வீரர். காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

ரியாசி பனிமலையில் ரோந்து பணியின்போது பாகிஸ்தான் ராணுவத்துடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் நாயக் அசோக் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார்.

அவரது உடல் தனி விமானம் மூலம் நேற்று இரவு 10.30 மணிக்கு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவ அதிகாரிகள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மாரியாதை செலுத்தினர்.

இன்று அதிகாலை வேன் மூலம் அவரது  உடல் ஊட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நாயக் அசோக்கின் தந்தை சந்திரன், தாய் நீலாவதி மற்றும் அக்காள்- தங்கை உள்ளனர். நாயக் அசோக்கிற்கு பெண் பார்த்து வந்த நிலையில் வீரமரணமடைந்தார்.
Tags:    

Similar News