செய்திகள்

களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2017-04-24 07:17 GMT   |   Update On 2017-04-24 07:17 GMT
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்ததுள்ளதால் சுற்றுலா வந்த பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளியல் நடத்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். தலையணையில் தண்ணீர் வரத்து இருப்பதால் கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் வெப்பத்தால் களக்காடு மலையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

நேற்று விடுமுறைநாள் என்பதால் தலையணையில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் தலையணையில் குறைந்த அளவே தண்ணீர் வந்ததால் நன்கு குளிக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். கடும் வறட்சி காரணமாக தலையணை பகுதியில் உள்ள மரங்களும் வெயிலால் பட்டு போய் காணப்படுகிறது.

வறட்சி எதிரொலியாக தலையணையை மூடுவது பற்றி வனத்துறையினர் பரிசீலனை செய்து வருகின்றனர். வழக்கமாக மே 1-ம் தேதி தலையணை மூடப்படும். ஆனால் இந்தாண்டு வறட்சி ஏற்பட்டுள்ளதால் அதற்கு முன்னதாகவே தலையணை மூடப்படும் என தெரிகிறது.

Similar News