செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தல் புளி விளைச்சல் பாதிப்பு: விவசாயிகள் கவலை

Published On 2017-04-20 16:08 GMT   |   Update On 2017-04-20 16:08 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் வறட்சியால், புளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்:

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் நெல் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. மானாவாரி பயிர்களான மிளகாய், பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்களும், போதிய மகசூல் கிடைக்கவில்லை.

விவசாயிகள் புளிய மரங்களின் மகசூலை பெரிதும் நம்பியிருந்தனர். ஏந்தல், உடைச்சியார் வலசை, பெருங்குளம், வாலாந் தரவை, தேவிபட்டினம் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் புளிய மரங்கள் உள்ளன.

இந்த மரங்களில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல மகசூல் கிடைத்தது. தற்போது மகசூலுக்கு வந்துள்ள புளிய மரங்களில், புளி விளைச்சல் இல்லாததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சொந்த உபயோகத்திற்காக தோப்புகளில் புளி வாங்க வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

Similar News