செய்திகள்

விவசாய நிலங்களுக்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு செல்லும் விவசாயிகள்

Published On 2017-03-29 07:12 GMT   |   Update On 2017-03-29 07:12 GMT
கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து முழுவதுமாக நின்று போனதால் தென்னை விவசாயிகள் ஒரு நாளைக்கு ரூ. 2 ஆயிரம் செலுத்து டேங்கர்கள், டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.
திருவள்ளூர்:

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் கிருஷ்ணா கால்வாய் வறண்டு காணப்படுகிறது.

கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வரத்து இருந்தால் ஈரப்பதம் காரணமாக கால்வாய் ஓரத்தில் உள்ள வயல்களுக்கு தண்ணீர் அதிக அளவு தேவைப்படாது. இதனை நம்பி விவசாயிகள் பல ஏக்கர்களில் வேர்கடலை, தென்னை சாகுபடி செய்து வந்தனர்.

தற்போது கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து முழுவதுமாக நின்று போனதால் வயல்கள் வறண்டு காணப்படுகிறது. தென்னை விவசாயிகள் ஒரு நாளைக்கு ரூ. 2 ஆயிரம் செலுத்து டேங்கர்கள், டிராக்டர்களை வாடகைக்கு எடுத்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News