செய்திகள்
மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்த காட்சி.

நெல்லையில் 2-வது நாளாக மறியல்: சத்துணவு ஊழியர்கள் 200 பேர் கைது

Published On 2017-03-22 10:30 GMT   |   Update On 2017-03-22 10:30 GMT
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடத்தினர்.
நெல்லை:

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சேமநல நிதி குறைந்த பட்சம் ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று 2-வது நாளாக மறியல் போராட்டம் நடத்தினர்.

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராதிகா தலைமை தாங்கினார். போராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் குமாரவேல் தொடங்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கோவில்பிச்சையா, நிர்வாகி கள் கோயில் பிச்சை, சிவஞானம், பார்த்த சாரதி, துரைசிங், கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 200 சத்துணவு ஊழியர்களை கைது செய்தனர்.

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்த காட்சி.

Similar News