செய்திகள்
விவசாயிகள் சங்கத்தினர் தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

தாமிரபரணி ஆற்றில் இறங்கி கம்யூ. கட்சியினர் போராட்டம்

Published On 2017-03-20 11:40 GMT   |   Update On 2017-03-20 11:40 GMT
குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
நெல்லை:

தாமிரபரணி ஆற்றில் இருந்து பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்க மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி வழங்கி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தமிழ்நாடு விவசாயிகள் நலச்சங்கத்தினர் நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை தாமிரபரணி ஆற்றில் இறங்கி அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்கள் பெருமாள், வேலுமயில், மாநில குழு உறுப்பினர் கணபதி, நெல்லை மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், ராமகிருஷ்ணன், நம்பி சாமி, கணேசன், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் சீனிவாசன், சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News