செய்திகள்

செங்கத்தில் தீபா பேனர்கள் கிழிப்பு: போலீஸ் நிலையம் முற்றுகை

Published On 2017-02-23 07:28 GMT   |   Update On 2017-02-23 07:28 GMT
மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா படத்துடன் கூடிய பேனர்களை மர்ம நபர்கள் கிழித்தது தொடர்பாக தீபா ஆதரவாளர்கள் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
செங்கம்:

மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு திருவண்ணாமலை மாவட்ட மக்களிடம் பெறும் வரவேற்பு உள்ளது.

அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் ஜெ.தீபா பேரவையில் இணைந்து தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.

இது சசிகலா ஆதரவாளர் கள் இடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் செங்கத்தில் தீபா பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்கம் புதிய பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், போளூர் ரோடு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தீபா படத்துடன் கூடிய பேனர்களை மர்ம நபர்கள் நேற்று இரவு கிழித்துள்ளனர்.

இன்று காலையில் பேனர்கள் கிழிக்கப்பட்டதை பார்த்த தீபா ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்தனர். இது குறித்து ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் செங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் போலீசார் புகாரை ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து தீபா ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் சமரசம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News