செய்திகள்

சசிகலாவுக்கு ஜெயில் தண்டனை: அமைதியான கொடநாடு எஸ்டேட்

Published On 2017-02-15 09:58 GMT   |   Update On 2017-02-15 09:58 GMT
சசிகலாவுக்கு தண்டனை என்ற தகவல் வெளியானதும் கொடநாடு எஸ்டேட் தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் தங்களது வேலையை தொடர்ந்தனர்.
கோத்தகிரி:

முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது சசிகலாவுடன் நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டுக்கு வந்து தங்குவது வழக்கம்.

ஜெயலலிதா எஸ்டேட்டுக்கு வந்து செல்லும் போதெல்லாம் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் அனைவரும் முகாமிடுவார்கள். சுமார் 800 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொடநாடு எஸ்டேட் நீலகிரியின் போயஸ் தோட்டம் என அழைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சசிகலாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பு விவரங்களை எஸ்டேட் தொழிலாளர்கள் பணியில் இருந்து கொண்டே உறவினர்கள், நண்பர்களிடம் கேட்டறிந்தனர். சசிகலாவுக்கு தண்டனை என்ற தகவல் வெளியானதும் எஸ்டேட் தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் தங்களது வேலையை தொடர்ந்தனர்.

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டை ஒட்டியுள்ள கெராடா மட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த சசிகலா எதிர்ப்பாளர்கள் பட்டாசு வெடித்தனர்.

Similar News