செய்திகள்

பழனி கோவில் தைப்பூசவிழா: 12 நாளில் உண்டியல் மூலம் ரூ. 2 கோடி வருமானம்

Published On 2017-02-14 10:00 GMT   |   Update On 2017-02-14 10:00 GMT
பழனி கோவில் தைப்பூசவிழா நிறைவு பெற்றதையடுத்து 12 நாளில் உண்டியல் மூலம் ரூ. 2 கோடி ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டிருந்தது.
பழனி:

பழனி முருகன் கோவில் கடந்த 3-ந் தேதி தைப்பூசத்திருவிழா தொடங்கி தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெற்றது. தைப்பூசத்திருவிழாவிற்கு முன்னதாக கடந்த 1-ந் தேதி அன்று உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது அதன்பின்னர் பழனி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணி நேற்று தொடங்கியது.

உண்டியலில் 12 நாட்களில் தொகையாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 3 ஆயிரத்து 862 ரொக்கப்பணம், தங்கம் 460 கிராம், வெள்ளி 14,600 கிராம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து, கத்தார், சவுதிஅரேபியா போன்ற வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 1077-ம் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டிருந்தது.

மேலும் தங்கத்தால் ஆன தாலி, சங்கிலி, மோதிரங்கள், வெள்ளி வேல், வெள்ளி அரணா, வெள்ளிப்பாதம் மற்றும் வெள்ளி பொருட்களும் பட்டம், பரிவட்டம், நவதானியங்கள், பாத்திரங்கள், வெள்ளி குத்து விளக்குகள், கடிகாரம், பட்டு வேஷ்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

Similar News