செய்திகள்

துரோகி என்ற பட்டத்தை தவிர்க்கவே பதவியை ராஜினாமா செய்தேன் - ஓ.பன்னீர் செல்வம்

Published On 2017-02-07 23:24 GMT   |   Update On 2017-02-07 23:24 GMT
தன்னை யாரும் துரோகி என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு எதிராக கருத்துக்களை செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்து பரபரப்பை கிளப்பிய நிலையில், தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துக்களாவது:-

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நான் என்றுமே நடந்து கொண்டது இல்லை. துரோகி என்ற அவப்பெயரை தடுக்கவே பதவியை ராஜினாமா செய்தேன். பதவியில் இருந்த போதும் எந்த எம்.எல்.ஏ-க்களையும் நான் கட்டுப்படுத்தியது கிடையாது. மனசாட்சியுடன் எம்.எல்.ஏ-க்கள் நடந்து கொள்ளட்டும்.

அரசு ஆலோசகர்கள் மற்றும் முதல்வரின் தனிச் செயலாளர்கள் சொந்த காரணங்களுக்காக பதவி விலகியுள்ளனர். இதற்கு,  முன்னதாக மூத்த தலைவர்களை பொதுச் செயலாளர் பதவியில் அமர வைத்தவர் எம்.ஜி.ஆர். 

மேலும், ஜெயலலிதாவிற்கு மட்டும் இரண்டு பொறுப்பும் வகிக்க வேண்டிய நிலை இருந்தது.ஆனால், ஆட்சி பொறுப்பும் கட்சி பொறுப்பும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பது அதிமுகவின் விதிமுறை அல்ல.

இவ்வறு கூறியுள்ளார்.

Similar News