செய்திகள்

மெரினா கடற்கரை மற்றும் மதுரை தமுக்கம் மைதானத்தில் 7 நாட்களாக நடந்த போரட்டம் வாபஸ்

Published On 2017-01-23 13:40 GMT   |   Update On 2017-01-23 13:40 GMT
சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிரந்தரமாக நடத்துவதற்கான புதிய சட்ட முன் வரைவு நிறைவேற்றப்பட்டுள்ளதால் சென்னை மெரினா கடற்கரை மற்றும் மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த 7 நாட்களாக நடந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை;

ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாததால் கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் வெகுண்டு எழுந்து போராட்டம் நடத்தினர்.

சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு இரவு, பகலாக போரட்டம் நடத்தி வந்தனர்.

தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தொடர்ந்து தமிழக அரசு நேற்று முன்தினம் அவசர சட்டம் பிறப்பித்தது. மேலும், அவசரச்சட்டதை நிரந்தர சட்டமாக்குவதற்கான, சட்ட முன் வரைவையும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றியது.

அவசர சட்டம் மற்றும் புதிய சட்ட முன் வரைவு குறித்து மெரினாவில் கூடியுள்ள மாணவர்களிடையே ஓய்வு பெற்ற நீதிபதி பரந்தாமன் விளக்கமளித்தர். 

இதனால், கடந்த 7 நாட்களாக மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மாணவர்கள் அறிவித்தனர். இதேபோல், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வந்த போராட்டமும் வாபஸ் பெறப்படுவதாக மாணவர்கள் அறிவித்துள்ளானர்.

Similar News