செய்திகள்

நத்தம் வாடிவாசல் முன்பு இளைஞர்கள் போராட்டம்

Published On 2017-01-22 04:54 GMT   |   Update On 2017-01-22 04:54 GMT
நத்தம் வாடிவாசல் முன் இன்று காலை இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போட்டி ஏற்பாடுகளை கைவிட்டு கலெக்டர் இங்கிருந்து வெளியேறவேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

நத்தம்:

நத்தம் வாடிவாசல் முன் இன்று காலை இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதியிலும் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் நடக்கும்போட்டியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து அங்குள்ள கைலாசநாதர் கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் தடுப்பு கம்புகளும் கட்டப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் வினய் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் முன் திரண்டு வந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கோசமிட்டனர். மேலும் போட்டி ஏற்பாடுகளை கைவிட்டு கலெக்டர் இங்கிருந்து வெளியேறவேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

Similar News