செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதியில் அமைச்சர் - அதிகாரிகள் ஆய்வு

Published On 2017-01-07 10:27 GMT   |   Update On 2017-01-07 10:27 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி பாதித்த பகுதியில் அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
போளூர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் வார்தா புயல் தாக்கத்தால் நெல் பயிர்கள் சேதமடைந்தன. இதுதவிர, பருவமழை பொய்த்தது போன்ற காரணங்களால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பயிர் பாதிப்பு குறித்து தமிழக அரசின் உத்தரவின் பேரில், அமைச்சர்கள்- உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு இன்று நடந்தது.

போளூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் நெல், சோளம், பருத்தி, பருப்பு பயிர்கள் கருகியது குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

போளூர் தாலுகா வசூர் கிராமத்தில் அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜித்தேந்தனாத் ஸ்வின், கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். ஆய்வின் போது, உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி, போளூர் தாசில்தார் புவனேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, கலசப்பாக்கம், தண்டராம்பட்டு தாலுகா க்களில் வறட்சி பாதித்த பகுதிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பிறகு, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அரசு அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து, கீழ்பென்னாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வறட்சி பாதிப்பு குறித்து அமைச்சர் குழு ஆய்வு மேற்கொண்டனர்.

Similar News