செய்திகள்
எம்.ஜி.ஆர். நாகராஜன் ஜெயலலிதா படத்துக்கு பூஜை செய்த காட்சி.

மதுரையில் ஜெயலலிதாவுக்கு கோவில் கட்டிய அ.தி.மு.க. தொண்டர்

Published On 2016-12-27 11:08 GMT   |   Update On 2016-12-27 11:08 GMT
மதுரையில் ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க. தொண்டர் கோவில் கட்டி பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்து வருகிறார்.
அவனியாபுரம்:

மதுரை அனுப்பானடியை சேர்ந்தவர் எம்.ஜி.ஆர்.நாகராஜன் அ.தி.மு.க. தொண்டர் ஆவார். இவர் மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதா நினைவாக கோவில் கட்டி உள்ளார்.

கடந்த 20 வருடங்களாக 56-வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறேன். ஜெயலலிதா தமிழக மக்களின் மனதில் இன்றளவும் வாழ்ந்து வருகிறார். இதனால் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படி எம்.ஜி.ஆர்., அம்மா என்ற பெயரில் கோவிலை கட்டி முடித்து விட்டேன்.

மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளன்று அவர்களின் 3½ அடிஉயர சிலை தனித்தனியாக வைக்க முடிவு செய்துள்ளேன். தற்போது இந்த இந்த கோவிலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படம் மட்டும் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு தினமும் பொங்கல் வைத்து பிரார்த்தனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News