செய்திகள்
உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மாடுபிடி வீரர்கள்-காளை வளர்ப்போர் உண்ணாவிரதம்

Published On 2016-12-04 09:44 GMT   |   Update On 2016-12-04 09:44 GMT
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்போர் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினர்.
அவனியாபுரம்:

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கான உச்சநீதிமன்ற தடையை நீக்க வேண்டும் என மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில் அவனியாபுரம் பஸ் நிலையத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு ஆர்வலர் முத்துமாரி தலைமை தாங்கினார். மனோகரன், திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பஞ்சாயத்து இயக்க பொறுப்பாளர் அண்ணா துரை, போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஜனதா தள மாநில பொதுச் செயலாளர் ஜான் மோசஸ், நகர தலைவர் பாக்கியத் தேவர், மாடசாமி, ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை செயலாளர் ராம்கி, ராமமூர்த்தி, பாரதி கண்ணம்மா மற்றும் ஜல்லிக்கட்டு, காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.



Similar News