செய்திகள்

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலையொட்டி புதுவையில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்: கலால்துறை உத்தரவு

Published On 2016-11-03 05:37 GMT   |   Update On 2016-11-03 05:37 GMT
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலையொட்டி மதுபானம் மற்றும் கள்-சாராயக்கடைகளை வருகிற 17-ந்தேதி மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 19-ந்தேதி இரவு 7 மணி வரை மூடப்பட வேண்டும் என்று கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை அரசின் கலால்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலையொட்டி மதுபானம் மற்றும் கள்-சாராயக்கடைகளை வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 19-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணி வரை மூடப்பட வேண்டும்.

அதோடு வாக்கு எண்ணும் நாளான 22-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை 6 மணிக்கு பிறகே மதுபான கடைகள் திறக்க வேண்டும். இந்த உத்தரவு புதுவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கள்-சாராயம் மற்றும் மதுபான கடைகளுக்கு பொருந்தும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Similar News