செய்திகள்

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கட்சி மேலிடம் அறிவிப்பு

Published On 2016-10-21 03:01 GMT   |   Update On 2016-10-22 11:31 GMT
புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முதல்-அமைச்சர் நாராயணசாமி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி:

நாராயணசாமி போட்டி

புதுவை சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி முதல்-அமைச்சராக நாராயணசாமி பதவியேற்றார். எம்.எல்.ஏ.வாக இல்லாத அவர் பதவியேற்ற 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

அதன்படி நாராயணசாமி போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ.வான ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான நெல்லித்தோப்பு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி மேலிடம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது.

இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுவார் என்று அக்கட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News