செய்திகள்

தஞ்சை தொகுதியில் பணம் பட்டுவாடாவை தடுக்க 12 தற்காலிக சோதனை சாவடி

Published On 2016-10-20 12:52 GMT   |   Update On 2016-10-20 12:52 GMT
தஞ்சையில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 12 இடங்களில் கூடுதல் சோதனைச் சாவடி மையம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூர்:

தஞ்சையில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 12 இடங்களில் கூடுதல் சோதனைச் சாவடி மையம் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் கடந்த 17-ம் மாலையில் இருந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

இந்நிலையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், சுந்தரம் நகர், சீனிவாசபுரம், டேனியல் தாமஸ் நகர், நாஞ்சிக்கோட்டை ரோடு, ஆர்.ஆர்.நகர், தென்னக பண்பாட்டு மையம், வல்லம் முதலைமுத்துவாரி பாலம், டேன்டக்ஸ் ரவுண்டானா, மேலவஸ்தாசாவடி ரவுண்டானா, விளார் ரோடு, வ.உ.சி.நகர் ஆகிய 12 இடங்களில் கூடுதலாக சோதனைச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி மையம் இயங்கி வருகிறது

இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 3 ஷிப்டாக பணிபுரிய உள்ளனர்.

Similar News