செய்திகள்
காட்டுப்பன்றிகளால் வாழைகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

களக்காடு அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்

Published On 2016-10-20 09:24 GMT   |   Update On 2016-10-20 09:24 GMT
களக்காடு அருகே வாழைத்தோட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட காட்டுபன்றிகள் கூட்டமாக புகுந்து வாழைகளை சேதப்படுத்தியது.
களக்காடு:

களக்காடு அடுத்த திருக்குறுங்குடி அருகே உள்ள வனப்பகுதியான ஆர்ச்வனம் என்ற இடத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு வாழை, நெல் பயிரிடப்பட்டுள்ளன.

நேற்றிரவு லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுதேசன், வட்டக்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன், பொன்னுத்துரை ஆகியோரது வாழைத்தோட்டத்திற்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் கூட்டமாக புகுந்து வாழைகளை பிடிங்கி சேதப்படுத்தியது. இன்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் வாழைகள் காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பதை கண்டு கவலையடைந்தனர்.

ஏற்கனவே வறட்சியால் தவித்த விவசாயிகளுக்கு தற்போது வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக் கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News