செய்திகள்

நாமக்கல் அருகே மினிவேன் சென்டர்மீடியனில் மோதி விபத்து: 2 வாலிபர்கள் பலி

Published On 2016-10-20 07:41 GMT   |   Update On 2016-10-20 07:41 GMT
நாமக்கல் அருகே மினிவேன் சென்டர்மீடியனில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
நாமக்கல்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வேப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுருளிவேல். இவரது மகன் காளிராஜ் (வயது 25).

இவரும், தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்த செல்லையா மகன் காளி யப்பன் (23) மற்றும் உத்தம பாளையத்தை சேர்ந்த ராசு மகன் அஜித் (21) ஆகிய 3 பேரும் திராட்சைகளை அட்டை பெட்டிகளில் அடுக் கடுக்காக வைத்து, அதனை மினி லோடு வேனில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு சென்று இறக்குவது வழக்கம்.

இதைபோல் நேற்று 3 பேரும் தேனி மாவட்டத்தில் இருந்து திராட்சை லோடை மினி லோடு வேனில் ஏற்றிக் கொண்டு பெங்களுருக்கு சென்றனர். பின்னர் பெங்களூரில் திராட்சை லோடை இறக்கி விட்டு, மீண்டும் அதே வேனில் ஊருக்கு திரும்பினர். இந்த லோடு வேனை காளிராஜ் ஓட்டினார்.

அதிகாலை 3 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது வள்ளிபுரம் அருகே உள்ள மேம்பாலம் நடுவில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியனில் திடீரென மினி வேன் பயங்கரமாக மோதியது.

இதில், காளிராஜ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

உடனே, பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே காளியப்பன் பரிதாபமாக இறந்தார்.

இதனால், அஜித்தை உடனடியாக நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு சாமி மற்றும் ஏட்டு கருணா நிதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான காளிராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக் கல் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத இருக்க விபத்துக்குள்ளான அந்த வேனை அங்கிருந்து சாலை யின் ஓரமாக அப்புறப் படுத்தப்பட்டது.

விபத்தில் காளிராஜ் மற்றும் காளியப்பன் ஆகியோர் பலியான தகவல் குறித்தும், காயம் அடைந்த அஜித் பற்றிய தகவல் குறித் தும், தேனி மாவட்டத்தில் உள்ள அவர்களுடைய பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை அறிந்ததும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் புறப்பட்டு கதறி அழுதவாறு மருத்துவ மனைக்கு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 2 பேருடைய உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

இந்த விபத்து தூக்க கலக்கத்தில் ஏற்பட்டதா? அல்லது மற்ற வாகனங் களுக்கு வழி விடும்போது இந்த விபத்து நடந்ததா? அல்லது பிரேக் பிடிக்காமல் நிலை தடுமாறி சென்று சென்டர் மீடியனில் மோதி யதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான 2 பேருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரிய வந்தது.

Similar News