செய்திகள்

மதுரையில் பா.ஜனதாவினர் மறியல்: போலீசாருடன் வாக்குவாதம்

Published On 2016-09-28 09:54 GMT   |   Update On 2016-09-28 09:54 GMT
இந்து மத தலைவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பாரதிய ஜனதாவினர் இன்று மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை:

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை, திண்டுக்கல்லில் அந்த அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம் மீதான தாக்குதல் போன்றவற்றை கண்டித்து மதுரையில் இன்று பாரதிய ஜனதாவினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் சுரேந்திரன் தலைமை தாங்கினார்.

கைது செய்... கைது செய்... தாக்குதலில் ஈடுபடுபவர்களை கைது செய்... என்பது உள்பட பல்வேறு கோ‌ஷங்களை மறியலில் ஈடுபட்டவர்கள் எழுப்பினர். மாவட்ட தலைவர் சசிராமன், இந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், நிர்வாகிகள் அழகர்சாமி, ஹரி, சுனிதாமலர், ஜெயஸ்ரீ உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.

மறியலை முன்னிட்டு அங்கு போலீசாரும் பாதுகாப்பு நடவடிக்கையாக குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவினரை கைது செய்தனர். அப்போது கட்சியினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் 200 பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.

Similar News